-->

14.பரிசேயனும் வரிவசூலிப்பவனும்

Tuesday, February 1, 2005

பரிசேயனும் வரிவசூலிப்பவனும்

இது இயேசு தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்கள் இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து கூறினார். எப்படி கடவுளை தொழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இக்கதை தற்காலத்தில் கொள்ளப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் 18:9-14 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்பது இவ்வுவமையின் மைய கருத்தாகும்.

பின்னனி

இயேசு இக்கதையை கூறும் பின்னனிய அறிவது இவ்வுவமையின் பொருளை விளங்குவதற்கு முக்கியமாகும். இயேசுவின் பல உவமைகளை அன்றைய யூதா நாட்டின் கலாச்சார பின்னனியோடு நோக்கும் போது கதையின் பொருள் வெளிப்படையாகும்.

பரிசேயர்

பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாற‌லாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர்.ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பறைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.

வரிவசூலிப்பவர்

வரிவசூலிப்பவர்களோ அப்போது யூதா நாட்டை ஆன்ட உரோமை அரசுக்கு பணியாற்றினார்கள். இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.

உவமை

பாவிஇருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார் “கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.”ஆனால் வரிவசூலிப்பவரோ தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்றார்.
பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

கருத்து
இங்கு பரிசேயன் கடவுள் சட்டத்தில் கூறிய அனைத்தையும் செய்த‌தாக மற்றவர் முன் பறைசாற்றுவதில் கவனமிருந்தே தவிர கடவுளிடம் தன்னை தாழ்த்தவில்லை. அவன் கடவுளிடம் தன் சுயத்தை மறைக்க என்னினான். இதனால் அவனது வேண்டுதலை கடவுள் புறக்கனித்தார்.

ஆனால் வரிவசூலிப்பவரோ கடவுள் முன்னதாக தன்னை தாழ்த்தினார். தன் பாவங்களை கூறினார். வெளிவேடமின்றி கடவுளிடம் சென்றார் இதனால் அவர‌து வேண்டுதல் ஏற்கப்பட்டது. வெளிவேடமாக ஜெபம் செய்வதை கடவுள் விரும்புவதில்லை. மேலும் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர் தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment