-->

40 வயதில் 49 குழந்தைகளுக்கு அப்பா

Wednesday, February 10, 2010

நம்பினால் நம்புங்கள், இது உண்மை ஆம் இது தமிழ் நாட்டில் அதுவும் ஈரோட்டில் தான், அவர் யார்? என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்களேன்.

அவர் பெயர் ஜிம்ராக், வயது நாற்பது, ஈரோடு அருகேயுள்ள பெருந்துறையைச் சார்ந்த நண்பர். கடவுளுக்கு பயந்தவர், நல்ல பாடகர், மேலும் கிறிஸ்துவைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்லுவது மட்டுமல்லாமல், பால் மணம் மாறாத குழந்தைகள் முதல், பதினாறுவயது குழந்தைகள் வரை, பெற்றோரால் கைவிடப்பட்ட‌ பலரையும் தன் வீட்டில் எவ்வித எதிபார்ப்பும் இல்லாமல் போஷித்து வருகிறார்.


அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கல்வி நல்ல உணவு உறைவிடம் ஆகியவற்றைக் கொடுத்து பராமரித்து வருகிறார். மேலும் இவையனைத்தையும் அவர் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினாலேயே நடத்தி வருகிறார். இதற்கு அவரது மனைவி மற்றும் மூன்று சிறு பிள்ளைகளும் பேருதவியாக இருந்து வருகிறார்கள்.

இப்போழுதும் கூட நீங்கள் ஈரோடு அருகிலுள்ள பெருந்துறை, சீனாபுரம் பகுதிக்குச் சென்றால் அவரையும் அவரது குழந்தைகளையும் நீங்கள் சந்திக்கலாம். அவருக்கு உதவியும் செய்யலாம்.

சகோதரருக்காகவும், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப் பெரிய குடும்பத்திற்காகவும், ஜெபித்துக் கொள்ளுங்கள்.

கைபேசி: 9894054637

மின்னஞ்சல்: sjimrock@gmail.com

Find him in Google Maps

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

1 comment:

  1. கர்த்தரின் அளவில்லா ஆசிர்வாதமும் ஐஸ்வரியமும் என்றும் எப்போதும் அவர் கூடவே இருப்பதாக!

    நினைத்துப் பார்க்கவே பெருமையாக உள்ளது. ஒரு தமிழ்கிறிஸ்தவர் தனியொருவராக இத்தனைப் பேரை பராமரிப்பதென்பது இலேசுப்பட்ட காரியமா?

    உதவக்கூடிய சகோதரர்கள் இவருக்கு உதவலாமே!

    ReplyDelete