-->

நேற்றைய முக்கிய செய்தி: ஒரே நாளில் நான்கு இடங்களில் பூகம்பம்

Saturday, February 20, 2010

என்னுடைய நண்பர் புதிதாக ஒரு வலைமலரை உருவாக்கியுள்ளார். அவருடைய வலை மலரில் எழுதுகிற கட்டுரைகளை நான் என்னுடைய வலைமலரிலும் இடுகை செய்கிறேன். அவர் முழு நேர ஊழியர், என்னுடைய வலைமலரின் ஜெபக்குழுவில் அவரும் ஒரு உறுப்பினர். அவருக்காகவும் அவரது ஊழியத்திற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள், அவரது வலைமலர் முகவரி: http://vowim.com/blog/

என் அன்பு நண்பர்களே, கிறிஸ்துவின் ஈடுஇனையில்லா நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம் ஊடகங்களின் வாயிலாக நில நடுக்கம், சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் போன்ற கொள்ளை நோய்கள், ஓரினச்சேர்க்கை போன்ற அவலட்சனமான காரியங்கள், சிறுகுழந்தைகள் குழந்தைகளை ஈன்றெடுப்பது, இன்னும் விசித்திரமான ஏராளமான காரியங்களை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அறிந்து கொண்டிருக்கிறோம்,
அனேக மக்கள் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது எதனால்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் ஏன் இவைகளை அனுமதிக்கிறார்? என்று பல கேள்விகளுக்கு உள்ளாகிறார்கள். உங்களுக்கும் இது போன்ற கேள்விகள் இருக்கலாம். ஏன் இவைகளெள்ளாம் நடக்கின்றன? இதன் முடிவு என்ன? அன்பே கடவுள் என்று கடவுளைப்பற்றி எல்லோரும் சொல்லிக்கொன்டிருக்க அந்த அன்பே உருவான கடவுள், ஏன் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுமதிக்கிறார்? அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.

இவைகளைக்குறித்து இன்னும் விரிவான கட்டுரைகள் மிக விரைவில் வெளிவரவிருக்கின்றன. படித்துப் பயனடையுங்கள் மீண்டும் சந்திப்போம் காத்திருங்கள்.....

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment