-->

அறிமுகம் தமிழ் கிறிஸ்தவ மன்றம்

Tuesday, April 13, 2010
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் அன்பானவர்களே, பைபிள் அங்கிள் வலைமலரில் மேலும் ஒரு மைல் கல்லாய் கிறிஸ்தவ பழத்தோட்டம் என்ற புதிய பகுதியை ஆரம்பித்துள்ளேன், இந்த புதிய பகுதியில், நீங்களும் உங்க‌ள் பெயரிலேயே பதிவிடலாம்.

மேலும் இது போன்ற பகுதி தமிழ் கிறிஸ்தவர்களுக்குப் புதிதில்லை என்றாலும், புறஜாதியார் மத்தியில் கிறிஸ்தவ கோட்பாடுகளை எடுத்துச் சொல்லவும், எல்லா கிறிஸ்தவர்களும் இனையத்தில் எழுதிப் பழகி தனியாக ஒரு இனைய தளத்தை உருவாக்கும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்கும். ஆண்டவருக்குச் சித்தமானால் இது மிக விரையிலேயே ஒரு மன்றமாக மலரும் என்று விசுவாசிக்கிறேன்.

இந்த தளத்திற்காக ஜெபித்துக் கொள்வீர்களாக...,

இந்த புதிய பகுதி பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன், உங்களையும் பதிவுகள் இட அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.(1 தெச5:11)" என்ற வார்த்தைகளின் படியே நாம் ஒன்றாக இனைந்து. நமக்கு விளங்காததும் எட்டாததுமான காரியங்களை ஒருமன‌ப்பட்டு அறிந்து கொள்வோம்.

ஒருவேளை நீங்கள் இரட்சிக்கப்பட்ட புதிதில் இருப்பீர்களானால், உங்களுக்காக படித்ததில் பிடித்தது. மற்றும் நகைச்சுவைகள் போன்ற பகுதிகளில் எழுதிப் பழகிய பின்பு கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதலாம்.

நீங்களும் பயனடைந்து மற்றவர்ளும் பயனைடய உஙகளை அன்புடன் அழைக்கிறேன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதாணமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக ஆமேன்

Link For Christian Arcade: http://n3.nabble.com/Christian-Arcade-f705129ef705129.html:

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

1 comment:

  1. அன்பின் சகோதரருக்கு

    நல்ல முயற்சி. கர்த்தர் ஆசிர்வதிப்பார்.

    ReplyDelete