-->

அதி மங்கல காரணனே..- Tamil Christian Song Video & Lyrics

Saturday, September 11, 2010

அதி மங்கல காரணனே 
பல்லவி
அதி மங்கல காரணனே , துதி -தங்கிய பூரணனே -நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள் 
மங்கின எங்களுக்கும், திதி சிங்கினர் தங்களுக்கும் -உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய், துங்கவனே-அதி 

முடி மன்னர்கள் மேடையும் ,மிகு -உன்னத வீடதையும் - நீங்கி 
மாட்டிடையே பிறந்த தாட்டிடையர் தொழ வந்தனையோ தரையில்-அதி 

தீய பேய்த் திரள் ஓடுதற்க்கும்,உம்பர் வாயத்திரள் பாடுதற்கும் -உனைப் 
பின்பற்றுவோர் முற்றும் துன்புற்று வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ? 

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment