-->

பாடுவேன் பரவச... (D.G.S) -Tamil Christian Song Video & Lyrics

Saturday, December 11, 2010

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை

என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்குகையில்
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிழ்வித்த மகிபனையே

ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
தாகம் தீர்த்த தயவை

வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவே

எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
ஜெயகீதம் ஈந்தவரை

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment