எங்களைப் பற்றி

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்..

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, மிகுந்த உபத்திரவங்களுக்கு மத்தியில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். என்னைப்போல அனேகர் இதுபோல தேவனை அறியாமல் இருந்து இன்னல்களுக்கு ஆளாவார்களோ என்ற ஆதங்கத்தில் நான் அறிந்துகொண்ட இயேசுகிறிஸ்துவை எப்படியாகிலும் மற்றவர்களுக்கும் சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இந்த வலைதளத்தை ஆரம்பித்து நடத்திவருகிறேன். 

இந்த எளியவனுக்காகவும், இந்த சிறிய ஊழியத்துக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

எங்கள் விசுவாசம்
பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறோம், நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரே பேரான குமாரன் என்றும், அவர் சிருஷ்டி அல்ல சிருஷ்டிகர் மற்றும் அனாதியானவர் என்றும், அவர் மனிதராக‌ இந்த உலகத்தில் உற்பவித்துப் பிறந்து நமக்காகவும் நம் எல்லோருடைய பாவங்களுக்காகவும், சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும், பரலோகத்தில் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும், அங்கிருந்து மீண்டும் உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயம் விசாரிக்க மகிமையோடே திரும்ப வருவார், அவருடைய இராஜ்ஜியத்துக்கு முடிவில்லை என்றும் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம். பொதுவாய் இருக்கிற பரிசுத்த திருச்சபை ஐக்கியத்தையும், பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலையும், பாவ மன்னிப்பும், நித்திய ஜீவனும் இருக்கிறது என்றும் விசுவாசிக்கிறோம்.

நன்றி 

இப்படிக்கு 
உங்கள் சகோதரன்
ராஜ்குமார்.S

எனது சாட்சியை இங்கே படிக்கலாம்

என்னை இங்கே தொடர்பு கொள்ளுங்கள்.